Monday, November 10, 2008
பாதிக்கப்பட்ட ஈழத்தமிழனின் கடிதம்
Sunday, November 9, 2008
யாழ் நாயன்மார்கட்டில் பெண் சுட்டுக்கொலை
Sunday, 09 November 2008
யாழ்ப்பாணம் அரியாலை நாயன்மார்கட்டு குளத்திற்கு அண்மையாக இளம் பெண்ணொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ஐரோப்பிய தொலைக்காட்சியின் குடாநாட்டுச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
சுட்டுக் கொல்லப்பட்டவர் வடமராட்சி கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், சிறீலங்கா படைகளினதும், புலனாய்வாளர்களினதும் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிய நிலையில் வாழ்ந்து வந்தவர் என்றும் எமது வடமராட்சி செய்தியாளர் தெரிவித்தார்.குமாரபுரத்தில் மூன்றாவது தடவை வான் தாக்குதல் : சிறுவர்கள் உட்பட ஐவர் காயம்
Sunday, 09 November 2008
கிளிநொச்சி, பரந்தனிலுள்ள குமாரபுரத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இடம்பெற்ற வான்வழி வானூர்தித் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் ஐவர் காயமடைந்துள்ளனர்.
வன்னி வான் பரப்பில் தோன்றிய சிறீலங்கா வான் படையினர் இரண்டு குண்டுவீச்சு வானூர்திகள் இன்று பிற்பகல் 12:50 அளவில் மக்கள் குடியிருப்புக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியிருந்தன.
இதன்போது இரண்டு அகவையுடைய சிறுவன் உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாக, ஐரோப்பிய தொலைக்காட்சியின் கிளிநொச்சி செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதே குமாரபுரத்தில் வான் தாக்குதலில் கொல்லப்பட்ட தனது தயாரது 31வது நாள் அந்தியேட்டி நிகழ்விற்கான ஏற்பாட்டில் ஈடுபட்டபோது இடம்பெற்ற தாக்குதலில் சிறுவனான மனோகரன் விதுரன் காயமடைந்துள்ளார்.
கடந்த 30 நாட்களுக்கு முன்னர் இவரது தாயாரான 33 அகவையுடைய உசா மனோகரன் சிறீலங்கா வான் படையினரது தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார்.
காயமடைந்த விதுரன் தர்மபுரத்தில் தற்காலிகமாக இயங்கிவரும் கிளிநொச்சி பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குமாரபுரத்தைச் சேர்ந்தவர்களான 12 அகவையுடைய சிறீஸ்காந் தரங்கன், இரண்டு பிள்ளைகளின் தயாரான 63 அகவையுடைய சிவராசா கெளரி, இரண்டு பிள்ளைகளின் தாயாரான் 72 அகவையுடைய, செல்லத்துரை கமலாம்பாள், மற்றும் பரந்தனைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 54 அகவையுடைய நாகலிங்கம் சிவராசா ஆகியோரே காயமடைந்த ஏனையோர் ஆவர்.
இவர்களில் இருவர் கிளிநொச்சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து தருமபுரம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சிறீலங்கா வான் படயினர் இன்றைய தாக்குதலிலும் 9 வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
வீடுகள் மட்டுமன்றி குமாரபுரத்தில் அமைந்துள்ள முருகன் ஆலயமும், கடையும் சேதமடைந்துள்ளன.
பிற்பகல் 12:50 முதல் 1:20 வரையான 30 நிமிட நேரத்தில் 4 தடவைகள் சிறீலங்கா வான் படையினர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
கடந்த மாதம் 10ஆம் நாள் பரந்தன் குமாரபுரத்தில் சிறீலங்கா வான் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இன்று காயமடைந்த விதுரனின் தயார் உசா மனோகரன் உட்பட பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டதுடன், 6 பேர் காயமடைந்திருந்தனர்.
குமாரபுரத்தில் அமைந்துள்ள முருகன் ஆலயமும், கடை ஒன்றும் கடந்த 10ஆம் நாள் இடம்பெற்ற தாக்குதலிலும் சேதமடைந்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
கடந்த மாதம் 28ஆம் குமாரபுரம் மீது மீண்டும் மேற்கொள்ளப்பட்டிருந்த வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் மூவர் காயமடைந்திருந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது தடவையாக குமாரபுரம் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Monday, November 3, 2008
இந்திய,இலங்கை அரசுகளைக்கண்டித்து பெரியார் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!









ஈழத்தமிழர்களின் மீதான தக்குதலைக்கண்டித்தும், இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி செய்வதைக் கண்டித்தும், விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்கக் கோரியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும்...
இன்று 2௧1௨008 ஞாயிறு மாலை 5 மணிக்கு கோவை மாவட்டம் சூலூர் பேருந்து நிலையம் முன்பாக பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் காயக்கட்டுக்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் பெரியார் திராவிடர் கழக மாவட்டத்தலைவர் துரைசாமி, சூலூர் தி.மு.க. நகரச்செயலாளர் ஜெகநாதன், கண்ணம்பாளையம் தி.மு.க செயலாளர் செங்குட்டுவன், சூலூர் ஒன்றிய ம.தி.மு.க செயலாளர் சூ.பெ.கருணாநிதி, முன்னாள் பேருராட்சி மன்ற துணைத்தலைவர் சூ.ஆ.முருகேசன்,பெரியார் திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம்,தமிழ்ச்செல்வி,வீரமணி,அ.ப.சிவா,
மற்றும் குழந்தைகள், பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி,கோவை நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை பல்லாயிரக்கனக்கான மக்கள் பார்த்தவாறு சென்றனர். இறுதியாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இராமகிருட்டிணன் இந்திய அரசு இலங்கைக்கு ராணுவ உதவி செய்வதைக் கண்டித்தும், விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்கக் கோரியும்,தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும், ஈழத்தமிழர்களின் மீதான தாக்குதலை கண்டித்தும் பேசினார்.
